கல்லூரிக் கீதம்

கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே

பாரிலொளி வீச வேண்டும் தங்கக் கதிரிலே

மங்கிடாதன்னொளி பொங்க என்றும் வாழவே

செங்கழல் பொன்மலர் கொண்டு போற்றினோமே.

கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே

ஒளிருவாய் ! ஒளிருவாய் ! ஒளிருவாய் !

எங்கள் கலைக்கோயில் கார்மேல் பாத்திமா

உந்தன் ஒளிபரப்பி ஈழமணிநாடு மிளிரவே

எந்த நாளும் இன்புடனே இயங்குவாய்…

கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே

ஒளிருவாய் ! ஒளிருவாய் ! ஒளிருவாய் !

தூய்மை நேர்மை என்பன உன் கொள்கையே

தாயாம் ஈழம் நிறைவுறத் தன்னிகரில் சேவையே

நேயமாக ஆற்றி நீடு வாழ்கவே…

கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே

ஒளிருவாய் ! ஒளிருவாய் ! ஒளிருவாய் !